29 May 2012

தமிழில் ஆண்டு – மாதங்கள்

தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு கூடி ஆய்வு செய்து திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும், திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்றும் முடிவு செய்தார்கள். தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டை 1971 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

      திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் சுறவம் (தை). இறுதிமாதம் சிலை (மார்கழி). வாரத்தின் ஏழு நாட்கள் முறையே ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன் (புதன்), வியாழன், வெள்ளி, காரி (சனி) ஆகியவை ஆகும்.

     மாதங்களை சுறவம் (தை), கும்பம் (மாசி), மீனம் (பங்குனி), மேழம் (சித்திரை), விடை (வைகாசி), இரட்டை (ஆனி), கடகம் (ஆடி), மடங்கல் (ஆவணி), கன்னி (புரட்டாசி), துலை (ஐப்பசி), நளி (கார்த்திகை), சிலை (மார்கழி) என எழுதுவோம்.

No comments:

Post a Comment