25 May 2012


அந்த வழியிலிருக்கும்
நகைக்கடைகளின்
எண்ணிக்கை
மனைவிக்குத் தெரியும்.

பொம்மைக் கடைகளின்
எண்ணிக்கையை
மகன் சொல்கிறான்.

துணிக்கடைகளின்
எண்ணிக்கையை
தங்கை கணக்கு
வைத்திருக்கிறாள்.

எனக்குத் தெரிந்ததெல்லாம்
வட்டிக்கடைகளின்
எண்ணிக்கை மட்டும்தான் !

No comments:

Post a Comment