10 Jun 2012


என்னை நேசிக்க

நிலவைக் கவர்ந்த
வானை நேசிக்கிறாய் !

நதியைக் கவர்ந்த
கடலை நேசிக்கிறாய் !

பறவையைக் கவர்ந்த
ஏரியை நேசிக்கிறாய் !

வண்டைக் கவர்ந்த
மலரை நேசிக்கிறாய் !

நூலிழையைக் கவர்ந்த
தறியை நேசிக்கிறாய் !

இசையைக் கவர்ந்த
வீணையை நேசிக்கிறாய் !

மங்கையே !

உன்னைக் கவர்ந்த என்னை
நேசிக்க ஏன் தெரியவில்லை ?

No comments:

Post a Comment