தமிழ்ப் பழமொழிகள் - ஆ
· ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.
· ஆடையில்லாதவன் அரை மனிதன்.
· ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
· ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
· ஆரால் கேடு, வாயால் கேடு.
· ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
· ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
· ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைபபூ சக்கரை.
· ஆழமறியாமல் காலை இடாதே.
· ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
· ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
· ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
· ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
· ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
· ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
· ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
· ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
· ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
· ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
· ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
· ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
· ஆனைக்கும் அடிசறுக்கும்.
· ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
· ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
No comments:
Post a Comment