9 Jun 2012

                                குரு பெயர்ச்சி பலன்கள் - 2012

Mesham - Guru peyarchi 2012 - குரு பெயர்ச்சி பலன்கள்
குருபகவான் 17.05.2012 முதல் உங்கள் ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2ம் வீட்டில் 

சஞ்சரிப்ப தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சித் தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறுவதுடன், சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்ககூடிய யோகமும் உண்டா கும். குரு 6,8,10 ஆகிய வீடுகளை பார்வை செய்வதால் தொழில் வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றிலும் மறைமுக எதிர்ப்புகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். சனி 7ல் சஞ் சரிப்பதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சர்ப கிரகங்களும் சாதக மின்றி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பதும் உத்தமம். கூட்டு தொழில் செய்பவர்களும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கல் சரள மாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன் பொருள் சேரும்.

Rishabam - Guru peyarchi 2012 - குரு பெயர்ச்சி பலன்கள்
குருபகவான் வரும் 17.05.2012 முதல் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செ;யவுள்ளார். ஜென்ம ராசியில் கேது வும் 7ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் பண விஷயங் களில் கவனமுடன் செயல்படுவது திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை பெறமுடியும், என்றாலும் உங்கள் ஜென்ம ராசிக்கு தர்ம கர்மாதிபதியான சனி பகவான் குணரோக ஸ்தானமான 6ம் வீட்டில் உச்சம் பெற்று பலமாக சஞ்சரிப்பதால் குருவால் ஏற்படகூடிய பிரச்சனைகள் குறைந்து வாழ்வில் முன்னேற்றங்களை அடைய முடியும். 02.12.2012ல் ஏற்படக்கூடிய சர்ப கிரகமாற்றத்தின் மூலம் ராகுபகவானும் 6ம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் மேலும் உங்களின் பலமும் வலிமை யும் கூடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக உள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். பொருளாதாரம் உயரும் கடன்கள் சற்று குறையும்.

Midhunam - Guru peyarchi 2012 - குரு பெயர்ச்சி பலன்கள்

குருபகவான் வரும் 17.05.2012 முதல் விரய ஸ்தானமான 12ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாவதுடன் குடும்பத்திலுள்ள வர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். 5ல் சனியும் சாதகமின்றி சஞ்சரிப்ப தால் வீண் அலைச்சல் டென்ஷன் அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலமற்ற நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் சுமாரான நிலையே இருக்கும். குருபார்வை 4,6,8ம் வீடுகளுக்கு இருப்பதால் எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் கேது பகவான் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் ஓரளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சேமிப்புகள் குறையும்.

Kadagam - Guru peyarchi 2012 - குரு பெயர்ச்சி பலன்கள்

குருபக வான் உங்கள் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11ல் வரும் 17.05.2012 முதல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். 4ல் சனி சஞ்சரிப்பதால் அர்த்ததாஷ்டம சனி நடைபெற்றாலும் குருவின் ஆதரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணவரவுகளும் சிறப்பாகவே இருக்கும். கடன்கள் யாவும் குறையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. பொன்பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். பயணங்களாலும் அனுகூலங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ் தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் ராகு 4லும் கேது 10லும் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல ;படுவது நல்லது. புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் தோன்றி மறையும்.

Simmam - Guru peyarchi 2012 - குரு பெயர்ச்சி பலன்கள்
குருபகவான் வரும் 17.05.2012 முதல் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இதனால் தொழில் வியாபார உத்தியோக ரீதியில் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். பணவிஷயங்களில் நம்பியவர்களே ஏமாற்றுவார்கள் என்பதால் கவனம் தேவை, என்றாலும் ஒரு ராசியில் அதிக காலம் தங்ககூடிய கிரகமான சனிபகவான் முயற்சி ஸ்தானமான 3ம் வீட்டில் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகுபகவானும் 3ம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் நீங்கள் நினைத்ததெல் லாம் நிறைவெறும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபார உத்தி யோக ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் சமாளித்து லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும், உற்றார் உறவினர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும்.

Kanni - Guru peyarchi 2012 - குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பகவான் ஜென்ம ராசிக்கு பாக்கியஸ்தானமான 9ம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரி யங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பணவரவு கள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவை கள் பூர்த்தியாவதும் பொன்பொருள் சேரும். ஆசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் அமையும். உத்தியோ கஸ்தர்களும் உயர்வடைவார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகுகேது 2,8 ல் சஞ்சரிக்க இருப்பது உங்க ளுக்கு ஏழரைச்சனி தொடருவதும் சற்று சாதக மற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத் தில் சற்று கவனம் செலுத்துவதும் முன் கோபத்தை குறைத்து உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும் மிகவும் உத்தமம்.

Thulam - Guru peyarchi 2012 - குரு பெயர்ச்சி பலன்கள்
வரும் 17.05.2012ல் ஏற்படவுள்ள குருமாற்றத்தால் குருபகவான் ஜென்மராசிக்கு 8ம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை சந்திப்பீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளிலும் தடைகள் ஏற்படும். இதுமட்டுமின்றி உங்களுக்கு ஏழரை சனி தொடருவரும் சர்ப கிரகங்களும் சாதகமின்றி சஞ்சரிப்பதும் மேலும் நெருக்கடி களை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், குடும்பத்திலுள் ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். பண விஷயத்தில் எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். தொழில் வியாபாரம் செய்பவர்க ளுக்கு உண்டாக கூடிய போட்டிகளால் லாபம் குறையும். கொடுத்த கடன்களையும் திரும்ப பெற முடியாமல் போகும். உத்தியோகஸ் தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிப்பதோடு பணியாளர்களும் ஒத்துழைப்பும் கிடைக்காமல் போகும். கடன்களும் உண்டாகும்.

Viruchigam - Guru peyarchi 2012 - குரு பெயர்ச்சி பலன்கள்
வரும் 17.05.2012 ஏற்படவுள்ள குருமாற்றத்தின் மூலம் குருபகவான் சமசப்தம ஸ்தானமான 7ம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களும் கைகூடும். கடன்கள் யாவும் குறையும். 02.12.2012 வரை சர்ப கிரகங்கள் 1,7ல் சஞ்சரித்தாலும் அதன் பின்னர் கேது 6ம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகளும் விலகும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் கிட்டும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். உங்களுக்கு ஏழரைசனி தொடரு வதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உத்தியோகஸ் தர்களும் உயர்வடைவார்கள். குருபார்வை 1,3,11 ஆகிய வீடுகளுக்கு இருப்பதால் எதிலும் முன்னேற்றமான பலன்களையும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளையும் பெற முடியும்.

Dhanusu - Guru peyarchi 2012 - குரு பெயர்ச்சி பலன்கள்
உங்கள் ராசியாதிபதி குருபகவான் வரும் 17.05.2012 முதல் குணரோக ஸ்தானமான 6ம் வீட்டில் கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் பண விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. திருமண சுபகாரியங்க ளுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். என்றாலும் சனிபகவான் லாப ஸ்தானமான 11ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் முன்னேற்ற மானப் பலன்களை பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேருவதுடன் அசையும் அசையா சொத்துக்களா லும் லாபம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் வரவேண்டிய லாபங்கள் தடையின்றி வந்து சேரும். 02.12.2012ல் ஏற்பட வுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு பகவானும் லாப ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பது மேலும் உங்களுக்கு வெற்றிகளை ஏற்படுத்த கூடிய அமைப்பாகும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பாராத உயர்வுகளை பெறமுடியும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். கடன்களும் படிப்படியாக குறையும்.

Makaram - Guru peyarchi 2012 - குரு பெயர்ச்சி பலன்கள்
வரும் 17.05.2012 முதல் குருபகவான் பஞ்சமஸ்தான மான 5ம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிப் பெறுவீர்கள். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். சனி 10ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் சில நெருக்கடிகளை சந்தித்தாலும் எதையும் சமாளிக்க கூடிய பலமும் வலிமையும் உண்டாகும். உத்தியோகஸ்தர்க ளுக்கு பதவி உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும் உதிய உயர்வுகள் கிட்டும் பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியமும் அற்புதமாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் அனுகூலத்தை ஏற்படுத்தும்.

Kumbam - Guru peyarchi 2012 - குரு பெயர்ச்சி பலன்கள்
வரும் 17.05.2012ல் ஏற்படவுள்ள குருமாற்றத்தால் குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு சுகஸ் தானமான 4ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இக்காலங்களில் சுகவாழ்வு சொகுசு வாழ்வில் இடையூறுகள் ஏற்படும். எல்லாம் இருந்தும் எதையும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை, பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் எற்படும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தையை சிலகாலம் தள்ளி வைக்கவும். வரும் 02.12.2012 முதல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் கேது 3ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சனிபகவான் பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டிலிருப்பதால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண்விரயம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம்.

Meenam - Guru peyarchi 2012 - குரு பெயர்ச்சி பலன்கள்
வரும் 17.05.2012ல் ஏற்படவுள்ள குருபெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசியாதிபதி குரு முயற்சி ஸ்தானமான 3ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைதாமங்கள் உண்டாகும். அஷ்டம சனியும் தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் 2ல் கேதுவும் 8ல் ராகுவும் சஞ்சரிக்க இருப்பதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் உணவு விஷயத்தில் கட்டுப் பாட்டுடன் இருப்பதும் நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களையும், சுபகாரியங்களுக்கான முயற்சிகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களையும், சுபகாரி யங்களுக்கான முயற்சிகளை தள்ளி வைப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மிகவும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment