18 Jul 2012


தீபாவளி காதல்

மத்தாப்பாய் சிரித்தாள்
மனம் கவர்ந்தாள்.

சங்கு சக்கரமாய்
அவளையே நாளும் சுற்றினேன்.

ஊசி பட்டாசாய்
ஒரு நாள் கோபத்தில் வெறுத்து
வெடித்தாள்.

நமுத்த கம்பி மத்தாப்பாய்
நான் நம்பிக்கை இழந்தேன்.

முடிவில்
புஸ்வானம் ஆகிப்போனது
என் காதல்.

No comments:

Post a Comment