30 Jul 2012


தமிழ்ப் பழமொழிகள் -


·  கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
·  கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
·  கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
·  கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
·  கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
·  கடல் திடலாகும், திடல் கடலாகும்.
·  கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
·  கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
·  கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
·  கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
·  கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
·  கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
·  கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
·  கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
·  கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
·  கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
·  கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
·  கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
·  கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
·  கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
·  கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
·  கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
·  கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
·  கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
·  கண் கண்டது கை செய்யும்.
·  கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.
·  கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
·  கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
·  கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
·  கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
·  கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
·  கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
·  கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
·  கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
·  கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
·  கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
·  கரணம் தப்பினால் மரணம்.
·  கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
·  கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
·  கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
·  கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
·  கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா?
·  கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
·  கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
·  கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
·  கல்லாடம் படித்தவனோடு மல் ஆடாதே.
·  கல்லாதவரே கண்ணில்லாதவர்.
·  கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
·  கல்வி அழகே அழகு.
·  கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
·  கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
·  கல்விக்கு அழகு கசடர மொழிதல்.
·  கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
·  கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
·  களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
·  கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
·  கள்ள மனம் துள்ளும்.
·  கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்.
·  கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
·  கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
·  கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
·  கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
·  கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
·  கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
·  கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
·  கனிந்த பழம் தானே விழும்.
·  கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
·  கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
·  கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

No comments:

Post a Comment