28 Jul 2012


உங்கள் இதயத்தின் வயது தெரியுமா?

உங்கள் இதயம் என்றவுடன் உங்கள் காதல் ஞாபகத்திற்கெல்லாம் போக வேண்டாம். உங்கள் உயிருக்கு ஆதாரமாக இருக்கும் இருதயத்தின் வயதைக் கணக்கிட்டுச் சொல்ல முடியுமா?

உங்கள் இருதயத்தின் வயதைக் கணக்கிட்டுச் சொல்கிறது ஒரு இணையதளம்.

இந்த இணையதளத்தில் இருக்கும் தனக்கு அல்லது தாய் அல்லது தந்தை எனும் இடத்தில் சரியானதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

அதன் கீழுள்ள பெயருக்கான காலிப்பெட்டியில் பெயரை உள்ளீடு செய்யுங்கள். அதனருகிலிருக்கும் பாலினத்தில் ஆண் அல்லது பெண் என்பதைத் தேர்வு செய்து கொள்ளவும். பின்னர் அதன் கீழுள்ள நகரத்தின் பெயரைத் தேர்வு செய்து கொள்ளவும். அதற்கடுத்துள்ள காலிப்பெட்டியில் வயதை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கீழுள்ள இப்போது தொடங்கு எனும் பொத்தானைச் சொடுக்க வேண்டும்.

அடுத்து இடம் பெற்றுள்ள தனி விவரம், உடல்நலம், வாழ்க்கை முறை போன்றவற்றில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யவும். இறுதியாக தங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து விட்டால் போதும். உங்கள் இதயத்தின் வயது தெரிந்துவிடும்.

முடிவில் உங்கள் இதயத்திற்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் இந்த இணையதளம்... நீண்டகாலம் வாழ்வதற்கு வழிமுறைகளையும் சொல்கிறது... உங்கள் இதயப் பாதுகாப்புக்கான தகவல்களையும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறது.

உங்கள் இதயத்திற்கு வயதையும், வழிமுறையையும் காண விருப்பமா? அப்படியானால்.... உங்களுக்காக...!

இணையதள முகவரி:

No comments:

Post a Comment