எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்
தாவரங்கள் உலகில் மற்ற உயிரினங்கள் வாழ வழி செய்பவை. பாசி முதல் 330அடி உயர மரம் வரை 2,60,000 தாவரங்கள் அறியப்பட்டுள்ளன.
Plant
nursery இந்த பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஏன் நீரிலும் கூட வாழ்ந்தது. இந்த உலகத்தில் மற்ற
இவற்றில் மிகச் சிலவற்றை மட்டுமே நாம் உணவு, உடை, மருந்து, உறைவிடம் அகியவற்றிற்காக பயன்படுத்துகிறோம். அவற்றில் முக்கியமானவை அரிசி, கோதுமை, பருத்தி, சோளம், புகையிலை போன்றவை. பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசும் கூட இதைப் பொறுத்தே நிலை பெறுகிறது. இதைவிட முக்கியமாக பில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த தாவரங்களின் பச்சையத்தால் தான் இப்போது நாம் உபயோகிக்கும் பெட்ரோல், மண்ணெண்னை, டீசல் ஆகியவை கிடைக்கிறது என்பதை பார்க்கும் போது தொழில் உலகின் அஸ்திவாரமே தாவரங்கள் தான் என்று கூறினால் கூட மிகையாகாது.
மேலும் பில்லியன் வருடங்களாகவே தாவரங்கள் காற்றில் வெளிப்படுத்திய ஆக்ஸிஜன் மிருகங்கள் முன்னேற்றமடைந்து உயிர்வகைகள் தோன்ற துவங்கின. தாவரங்களால் மண் சரிவு, மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கவும், மண் வளம், மழை வளம், சுகமான சீதோஷ்ண நிலை ஆகியவற்றை நிலைப்படுத்தவும் முடியும் என்பதைக் காணும் போது மனித வாழ்க்கைக்கு தாவரங்களின் மிக ஆதாரமான பங்கை உணரலாம்.
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அஸ்திவாரமாக, அடிநாதமாக தாவரங்கள் இருக்கின்றன.
No comments:
Post a Comment