குழந்தைகளுக்கான பெயர்கள்
இளம் வயதினர் திருமணம் முடிந்தவுடனேயே தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்? என தேடத் தொடங்கி விடுவார்கள்.
முன்பெல்லாம் தங்கள் பெற்றோர் பெயர் அல்லது தங்கள் கடவுள் பெயர் அல்லது தங்களுக்கு விருப்பமான பெயர்களை வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தற்போதெல்லாம் அந்தக்காலம் போயே போய் விட்டது.
இளம் வயதினர் பலரும் தங்கள் குழந்தையின் பெயர் யாரும் வைக்காத புதுமையான பெயராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்தப் பெயர் வாயில் நுழையாத பெயராக இருந்தாலும் சரி, நீளமான பெயராக இருந்தாலும் சரி அந்தப் பெயரை வைத்து விடுகிறார்கள்.
சிலர் சிலர் எண் கணித முறைப்படி பெயர்களை மாற்ற விரும்புவார்கள்.
சிலர் ஜோதிட நம்பிக்கையில் ஜோதிடர் சொல்லும் எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்கெல்லம் வழிகாட்ட பெயர்களுக்காகவே ஒரு இணையதளம் இருக்கிறது.
இந்த இணையதளத்தில் பெயர்களுக்கான தேடுதல் எனும் தலைப்பில் ஆங்கில எழுத்துக்களின் அகர வரிசையில் பெயர்ப்பட்டியல் உள்ளது. இந்தப் பட்டியல் பெயர், அதன் மூலம், பயன்படுத்தும் மொழி எனும் மூன்று அட்டவணைகளின் கீழ் தரப்பட்டுள்ளது.
மேலும் இந்த இணையதளத்தில் இன்றைய மேலான பெயர்கள், 100 மேலான பெயர்கள், 1000 மேலான பெயர்கள், 20 ஆம் நூற்றாண்டின் சிறப்புப் பெயர்கள், புகழ்பெற்றவர்கள் பெயர்கள், வழக்கத்திற்கு மாறான பெயர்கள், நவீனமான பெயர்கள், வேதாகமக் குழந்தைப் பெயர்கள், இருபாலருக்குமான பெயர்கள் என பல தலைப்புகளின் கீழ் பெயர்கள் தரப்பட்டுள்ளன.
இவை தவிர பெயர்களுக்கான பொருள் விளக்கம் எனும் தலைப்பில் பல பெயர்களுக்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த இணையதளத்தில் குழந்தைப் பெயர்களுடன் தொடர்புடைய வேறு பல தகவல்களும், விளையாட்டுக்களும் கூட இடம் பெற்றிருக்கின்றன.
குழந்தகளுக்குப் பெயர் தேடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் பயனளிக்கும் தளம் இது.

இணையதள முகவரி:
No comments:
Post a Comment