5 Aug 2012


ஆங்கிலச் சொல்லகராதித் திறனைச் சோதிக்கலாம்



ஆங்கிலத்திலிருக்கும் சொற்களுக்கான சொல்லகராதி (Vocabulary) குறித்த அறிவு ஓரளவு இருந்தால்தான் நாம் பேசும் அல்லது பயன்படுத்தும் ஆங்கிலத்தில் புதிய சொற்களைப் பயன்படுத்த முடியும். பிறர் நம்மிடம் பேசும் போதும் புதிய சொற்களைப் புரிந்து கொள்ளவும் முடியும்.

ஆங்கிலத்தில் சொல்லகராதி குறித்த பல்வேறு தகவல்களை அளிக்கும் ஒரு இணையதளம் உள்ளது.

இந்த இணையதளத்தில் உள்ள காலிப்பெட்டியில் ஆங்கிலச் சொல் உள்ளீடு செய்து அதன் அருகிலுள்ள தேடுதல் பொத்தானைச் சொடுக்கினால் அந்தச் சொல் குறித்த சில தகவல்களை அளிக்கிறது. அந்தத் தகவலிலுள்ள சில முக்கியமான சொற்கள் வேறு நிறத்திலிருக்கின்றன். இந்தச் சொற்களின் மேல் வைத்துச் சொடுக்கினால் அந்தச் சொற்களுக்கான விளக்கமும் அதன் கீழ் பகுதியில் கிடைக்கிறது.

இப்படியே தொடர்ச்சியாக பல சொற்களுக்கான விளக்கங்களை அறிந்து கொள்ள முடியும்.

நாம் விளக்கம் காண விரும்பும் ஒவ்வொரு சொல்லையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்காக அந்தச் சொல்லின் வலது புறம் உள்ள ஒலிபெருக்கிப் படத்தில் சொடுக்கினால் உச்சரிப்பு கிடைக்கிறது. இது போல் அந்தச் சொல் பயன்படுத்தப்பட்ட இடம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

என்ன? உங்கள் ஆங்கிலச் சொல்லகராதித் திறனைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறீர்களா? வாருங்கள்... உங்களுக்காகவே....

இணையதள முகவரி:


No comments:

Post a Comment