தமிழ்ப் பழமொழிகள் - கெ, கே
· கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
· கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
· கெடுவான் கேடு நினைப்பான்.
· கெட்டாலும் கெட்டி கெட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
· கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
· கெட்டும் பட்டணம் சேர்.
· கெண்டையைப் போட்டு வராலை இழு.
· கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
· கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
· கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
· கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பியதெல்லாம் சொல்லாதே?
· கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
· கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
No comments:
Post a Comment