வெளிநாட்டு வேலைக்குச் செல்கிறீர்களா?
இந்தியாவிலிருந்து வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்புகிறீர்களா? உங்கள் வெளிநாட்டு வேலைக்கான முகவர்கள் இந்திய அரசால அங்கீகரிக்கப்பட்டவர்கள்தானா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இதற்கு இந்திய அரசின் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நலனுக்கான அமைச்சகத்தின் இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தேர்வு செய்யும் முகவர்களின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. இதிலிருக்கும் முகவர்களின் பட்டியலிலிருந்து குறிப்பிட்ட முகவரின் பெயரின் மேல் சொடுக்கினால் அந்த முகவரின் பெயர் மற்றும் பதிவு எண், முகவரி, தொடர்பு எண், தொலைநகல் எண், மின்னஞ்சல், அரசால் அளிக்கப்பட்ட நிலை எனும் தலைப்புகளில் அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் முகவர் பெயர், பதிவு எண், தொலைபேசி எண்கள் போன்றவற்றை உள்ளீடு செய்து விரைவாகத் தேடும் வசதியும் செய்யப்பட்டுள்ளன.
இந்த இணையதளத்தில் இணைய வழியில் குடி பெயர்ச்சி விண்ணப்பம் (Online Emigration Form) சமர்ப்பிப்பதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருப்பவர்களுக்கும், வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கும் இந்தத் தளம் பயனுள்ள தளம்தானே...?

இணையதள முகவரி:
No comments:
Post a Comment