14 Sept 2012


சொல்லிற்கு விளக்கம் அறிய வேண்டுமா?

ஆங்கிலச் சொல் ஏதாவது ஒன்றிற்குப் பொருள் தேடி பல அகரமுதலிகளைப் (Dictionary) புரட்டிக் கொண்டிருக்க வேண்டாம். நிகண்டு (Thesaurus) குறிப்புகள் தேடிக் கொண்டிருக்க வேண்டாம். சில பெயர்களுக்கு விளக்கம் தேடி அலைந்து கொண்டிருக்க வேண்டாம்.
இவைகளையெல்லாம் இரு இணையதளம் அளிக்கிறது.
இந்த இணையதளத்தின் மேல் பகுதியில் வலதுபுறமுள்ள காலிப்பெட்டியில் நாம் பொருள் காண விரும்பும் சொல்லினை உள்ளீடு செய்து அருகிலுள்ளதேடுதல்பொத்தானைச் சொடுக்கினால் அந்தச் சொல்லிற்கான பொருள்கள் விளக்கமாகத் தரப்பட்டிருக்கின்றன.

இந்த இணையதளத்திலுள்ள அகரமுதலி எனும் தலைப்பில் சொடுக்கினால் ஆங்கில எழுத்துக்கள் A முதல் Z வரையுள்ள எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் அகரவரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சொல்லின் மேல் சொடுக்கி பொருள் அறிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளத்திலுள்ள நிகண்டு (Thesaurus) எனும் தலைப்பில் சொடுக்கினால் காலிப்பெட்டியுடனான பக்கம் திறக்கிறது. இந்தக் காலிப்பெட்டியில் சொல்லை உள்ளீடு செய்து தேடுதல் பொத்தானைச் சொடுக்கினால் ஒரே பொருளுடைய (Synonymous) சொற்கள், அடையாளமற்ற (Anonymous) சொற்கள் போன்றவைகளையும் சொல்லுடன் தொடர்புடைய வேறு சில சொற்களையும் அறிந்து கொள்ள முடியும்.

இந்த இணையதளத்தில் பெயர்களுக்கான தேடுதல் மூலம் சில பெயர்களுக்கான விளக்கங்களையும் அறிந்து கொள்ளலாம். உங்களுடைய பெயருக்கான விளக்கம் அங்கு இல்லையென்றால் அதைச் சேர்த்துக் கொள்வதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளன

சொற்களின் விளக்கம் தேடி, இந்த இணையதளத்திற்குச் செல்ல விரும்புபவர்களுக்காக...

இணையதள முகவரி:


No comments:

Post a Comment