தமிழ்ப் பழமொழிகள் - ச, சா
·
சட்டியில் இருந்தால் தான்
அகப்பையில் வரும்.
·
சண்டிக் குதிரை
நொண்டிச் சாரதி.
·
சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
·
சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
·
சபையிலே நக்கீரன் அரசிலே
விற்சேரன்.
·
சம்பளம் இல்லாத
சேவகனும், கோபமில்லாத எசமானும்.
·
சருகைக் கண்டு
தணலஞ்சுமா?
·
சர்க்கரை என்றால் தித்திக்குமா?
·
சர்க்கரை என்று
சொன்னால் தித்திக்குமா?
·
சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
·
சாட்சிக்காரன் காலில்
விழுவதிலும் சண்டைக்காரன் காலில்
விழலாம்.
·
சாட்டை
இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
·
சாண்
ஏற
முழம்
சறுக்கிறது.
·
சாது
மிரண்டால் காடு
கொள்ளாது.
·
சித்திரமும் கைப்பழக்கம்.
·
சிறு
துரும்பும் பல்
குத்த
உதவும்.
· சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி.
No comments:
Post a Comment