நறுந்தொகை
நூறாண்டு
பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள்
பாசிபோல் வேர்க்கொள் ளாதே.
ஒருநாள்
பழகினும் பெரியோர் கேண்மை
பிளக்க வேர்வீழ்க் கும்மே.
கற்கை
நன்றே கற்கை நன்றே
பிச்சை
புகினும் கற்கை நன்றே.
எக்குடிப்
பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில்
கற்றோரை மேல்வரு கென்பர்.
அதிவீரராம பாண்டியர்.
No comments:
Post a Comment