நினைப்பது நடக்கும்
ஒரு மனிதன் தீவிரமாக ஒன்றை நினைத்தால் அது அப்படியே நடந்துவிட வாய்ப்பு இருக்கிறது
என்பதை ஜேம்ஸ் ஓடிஸ் என்ற அமெரிக்கர் நிரூபித்து காட்டியிருக்கிறார். இவர் அமெரிக்க
சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தவர். எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் தனது
இறுதி காலத்தில் சாக விரும்பலாம். ஆனால் இந்த ஜேம்ஸ் ஓடிஸ் தனது சாவை ஒரு வித்தியாசமான
முறையில் வர விரும்பினார். “ஒரு மின்னல் தாக்கி, நான் சாக விரும்பிகிறேன்” என்று அடிக்கடி
தன் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கூறிக்கொண்டிருந்தார். இதை எல்லோரும் ஒரு விளையாட்டாகவே
எடுத்துக்கொண்டார்கள். ஆனால் தனது 58 வது வயதில் இந்த ஜேம்ஸ் ஓடிஸ் தனது வீட்டில்,
கதவுக்கு அருகில் நின்று கொண்டிருந்தபோது, அவர் விரும்பியபடியே ஒரு மின்னல் தாக்கி
இறந்து விட்டார். தீவிரமான விருப்பத்துக்கு இவ்வளவு சக்தி இருக்கிறது.
No comments:
Post a Comment