16 Jun 2012


மாற்றங்கள்

பிரகாரம் நுழைந்தவுடன்
கனியாகி விடுகிறது
எலுமிச்சை …..

தீர்த்தமாகி விடுகிறது
தண்ணீர் …….

பிரசாதமாகி விடுகிறது
திருநீறும் குங்குமமும் ……

எந்த மாற்றமுமின்றி
வெளியேறுகிறான்

பக்தன்.

No comments:

Post a Comment