பின்னம்
பின்னம் என்பது முழு எண் ஒன்றின் பகுதியை குறிக்கும். ஒன்றை நான்காக வகுத்தால், அதில் 3 பகுதிகளைக் குறிக்க 3/4 எனக் குறிப்பது பின்னம். இதனை பிள்வம், பிள்ளம் என்றும் குறிக்கலாம். தமிழில் இதற்கு கீழ்வாய் எண்கள் என்பது பெயர்.
தமிழில் கீழ்வாய் எண்களின் (பின்னங்களின்) பெயர்கள்
§ 15/16 = 0.9375 = முக்காலே மூன்று வீசம்
§ 3/4 = 0.75 = முக்கால்
§ 1/2 = 0.5 = அரை
§ 1/4 = 0.25 = கால்
§ 1/5 = 0.2 = நால்மா/நான்மா
§ 3/16 = 0.1875 = மூன்று வீசம்
§ 3/20 = 0.15 = மூன்றுமா
§ 1/8 = 0.125 = அரைக்கால்
§ 1/10 = 0.1 = இருமா
§ 1/16 = 0.0625 = வீசம்
§ 1/20 = 0.05 = மா
§ 3/64 = 0.046875 = முக்கால் வீசம்
§ 3/80 = 0.0375 = முக்காணி
§ 1/32 = 0.03125 = அரை வீசம்
§ 1/40 = 0.025 = அரை மா
§ 1/64 = 0.015625 = கால் வீசம்
§ 1/80 = 0.0125 = காணி
§ 3/320 = 0.009375 = அரைக்காணி முந்திரி
§ 1/160 = 0.00625 = அரைக் காணி
§ 1/320 = 0.003125 = முந்திரி
§ 3/1280 = 0.00234375 = கீழ் முக்கால்
§ 1/640 = 0.0015625 = கீழ் அரை
§ 1/1280 = 0.00078125 = கீழ்க் கால்
§ 1/1600 = 0.000625 = கீழ் நால்மா
§ 3/5020 = 0.000597609 = கீழ் மூன்று வீசம்
§ 1/2560 =0.000390625 = கீழ் அரைக்கால்
§ 1/3200 = 0.0003125 = கீழ் இருமா
§ 1/5120 = 0.000195312= கீழ் மாகாணி
§ 1/6400 = 0.00015625 = கீழ் மா
§ 3/25600 = 0.000117187 = கீழ் முக்காணி
§ 1/12800 = 0.000078125 = கீழ் அரைமா
§ 1/25600 = 0.000039062 = கீழ்க்காணி
§ 1/51200 = 0.000019531 = கீழ் அரைக்காணி
§ 1/102400 = 0.000009765 = கீழ் முந்திரி}
No comments:
Post a Comment