நட்பு
நல்லார் எனத்தான் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
- நாலடியார்.
( பொருள்: மக்களிடம் குற்றம் இருத்தல் இயற்கை. ஆகவே நண்பராக
ஏற்றுக்கொண்டவரிடம் குற்றமிருந்தால் பொறுத்துக்கொள்ள வேண்டும்)
நூற்குறிப்பு: நாலடியாரை அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
என மூன்று பகுதிகளாக தொகுத்து கடவுள் வாழ்த்தையும் பதுமனார் பாடியுள்ளார். இந்நூலை
நாலடி நானூறு என்றும் கூறுவர். நீதி நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்தபடியாக விளங்குகிறது.
No comments:
Post a Comment