16 Sept 2012


பார்வை
கிளி ஜோசியம் பார்க்க
உட்கார்ந்திருக்கிறேன் மகனுடன்
சிறகொடிந்த
என் வாழ்க்கை பறக்குமா
என்ற கவலையில்
சீட்டுக் கட்டையே
பார்த்திருக்கிறேன். நான்
சிறகோடு இருக்கும் கிளி
பறக்குமா என்று
கிளியையே பார்த்திருக்கிறான்
என் மகன்.

No comments:

Post a Comment