16 Sept 2012


தமிழ்ப் பழமொழிகள் - கை

  கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
  கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா.
  கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
  கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்.
  கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
  கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும்.
  கையிலே காசு வாயிலே தோசை.
  கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
  கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
  கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்.

No comments:

Post a Comment